சனி, 16 மார்ச், 2013

கோரல்டிரா கற்றுக் கொள்வது எப்படி?



கோரல்டிரா கற்றுக் கொள்வது எப்படி?


வணக்கம்.  அன்பார்ந்த நெஞ்சங்களே!  எல்லோரும் தொழில்நுட்ப பதிவர்னு ரொம்ப பெரிய பெரிய விசயங்களை அவங்க வலைதளத்துல சொல்றாங்க.  நாமளும் ஏதோ நமக்கு தெரிஞ்சத இந்த ஜனங்களுக்கு சொன்னா என்னன்னு தோணுச்சு.  அதோட விளைவுதான்.  இந்த கோரல்டிரா கற்றுக் கொள்வது எப்படிங்கிறது? 

இதுக்கு நமக்கு தகுதி இருக்கா?  இல்ல வேற எவனும் கோரல்டிரான்னு மேட்டர் நம்மளவிட நல்லா சொல்லியிருக்காங்களான்னு பார்த்தா அப்படி ஒன்னும் இல்லேன்னுதான் நினைக்கிறேன்.  ம்... ஒரு வேளை சொல்லியிருந்தாலும் நாம நம்ம ஸ்டைலுல ஏதேனும் சொல்லுவோம் ஜனங்களுக்குனு தான் இந்த சின்ன முயற்சி.

முதல்ல நாம தொழில்நுட்பம் சம்பந்தமாக ஏதேனும் பதிவு கொடுக்கனும்னு நினைச்சோம்.  நமக்கு தெரிஞ்சது பிரிண்டிங் லைன்  அதனால இந்த கோரல்டிராவை நாம அடிக்கடி தினமும் ஒரு ஏழு எட்டு மணி நேரம் வருடக்கணக்கா பயன்படுத்துறதுனால இத டாபிக்கா வச்சா என்னன்னு தோனுச்சு.

அதுமட்டுமில்லாம இந்த கோரல்டிரா ரொம்பவே ஈசின்னு எனக்கு படுது.  நானே ஒரு அரைகுறை.  நமக்கே இது விளங்குனதுனால நம்ம ஜனங்க ஈசியா புரிஞ்சுப்பாங்கன்னு நினைக்குறேன்.

  அப்புறம் பார்த்தீங்கன்னா கோரல்டிராவுல இவ்வளவு டூல்ஸ் இருந்தும் நான் ஒரு ஐந்தாறு டூலைவைத்து தான் பல பல மேட்டரை டிசைன் செஞ்சிருக்கேன்.  மத்த டூலை நான் உபயோகப்படுத்த அவசியம் எனக்கு இல்ல.   இன்னும் சொல்லப்போனா டூல்ஸ் பாக்ஸையே நான் பார்த்தது மெனுவில் போய் ஏதேனும் பார்த்தது கூட அவ்வளவா கிடையாதுன்னு நினைக்கிறேன். ஒரு ஐந்தாறு டூலை வைத்து அடிக்கடி அதையே உபயோகப்படுத்திதான் ஒரு தம்மாத்துண்டு விசிட்டிங்கார்டையோ,  அல்லது மொக்கை டிஜிட்டல் பேனரையோ இதுவரை செய்திருக்கேன்.  அதனால நாம ஈசியா ஜனங்களுக்கு இத சொல்லி புரியவைத்து நாமளும் தொழில்நுட்ப பதிவர்னு பேரு வாங்கிரலாமுன்னு நினைக்கிறேன்.  நீங்க என்ன நினைக்கிறீங்க?  
நான் ஒன்னும் வாத்தியார் கிடையாது.  இருந்தாலும் உங்களுக்கு எப்படி பாடம் நடத்தி அழகாக சொல்லி புரிய வைக்கப்போறேன்னு தெரியல.  எவனாவது அரைகுறையா தெரிஞ்சு, நம்ம பெரிய ஆளு நம்மகிட்ட வந்து இன்னும் கத்துக்கிடுவோம் அல்லது கூட கொஞ்சம் தெரிஞ்சுக்குவோம்னு நினைச்சு நம்ம சொல்லித் தர்ற விசயத்தை படிச்சு உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணாங்கிற கதையா புரிந்ததும் புரியாம போகாம இருந்தா சரிதான். 

சரி பாடத்துக்குப் போவோம்.

கோரல்டிராவை பத்தி நமக்கு தெரிஞ்சது.

நான் ஒரு பத்து வருடத்துக்கு முன்னாலன்னு நினைக்கிறேன்.  கோரல்டிரா 5 வெர்சன் பயன்படுத்தினேன்.  அப்புறம் 7ன்னு நினைக்கிறேன்.  அப்புறம் 8, 9,10,11,12.  இப்ப 14.  வெர்சன் 15 கூட இருக்கு எல்லாம் ஒன்னுதான்.  எதுனாலும் பயன்படுத்தலாம்.  நீங்க பயிற்சி செய்து பார்க்கனும்னா நான் 14 ரெக்கமெண்ட் பண்றேன்.  

1. கோரல்டிராவை பயன்படுத்தி ஒரு மேட்டர் டைப் அடித்து பிரிண்ட் அவுட் எடுக்கலாம். மனு மாதிரி அல்லது ஒரு லவ் லெட்டர் அல்லது ஒரு மொட்டை பெட்டிசன்னு வச்சுக்கங்க. இது போல ஏதேனும் ஒன்னு.  

2. அப்புறம் இன்னும் கொஞ்சம் அட்வான்சா  அதுல படம் போடுறது அதாவது எழுத்தும் + படமும் சேர்ந்து டிசைன் செய்யலாம்.  படம் வரையலாம்.  போட்டோசாப் கேள்விபட்டிருப்பீங்க.  அதுல ஏதேனும் டிசைன் செய்ததை இங்க கொண்டுவந்து பெரியதாவோ. சிரியதாவோ நம்ம மேட்டரோட சேர்த்து  வச்சுக்கலாம். பேஜ் மேக்கர் கேள்விபட்டிருப்பீங்க.  அதுல புக் ஒர்க் செய்யலாம்.  அதுபோல இதிலேயும் ஒரு புத்தகம் வடிவமைக்கலாம்.  


பாடம் 1 


முதல்ல டூல்ஸ்ஐ பார்க்கலாம்.  இதுல என்னன்னா  டூல்ஸ் லிஸ்டில் 17 டூல் இருக்கிறது.  இப்பதான் எண்ணினேன்.  அதிலேயும் ஒரு சில உட்பிரிவு இருக்குது.  நாம எல்லாவற்றையும் படிக்கப் போறது இல்ல. ஒரு 7 அல்லது 8.  இன்னும் கூட குறைச்சு ஒரு 6 இல்லன்னா 5 மட்டும் பார்ப்போம்.  எல்லா டூலையும் நாம கற்றுக்கொள்ள கூடாது.   கோரல்டிராவை பற்றி ஒன்னுமே தெரியாவதங்க மற்றும் ஏதோ கொஞ்சம் தெரிஞ்சவங்க நான் சொல்லிக்குடுக்கிறத பாலோ பண்ணிங்கன்னா ஈசியா கத்துக்கலாம்.   எல்லா டூலையும் படிக்க தேவையில்லை.

  நான் ஏற்கனவே சொன்னேன்.  எனக்கு  எல்லா டூலையும் தெரிஞ்சும் வருடக்கணக்கா நான் பயன்படுத்தியது இல்ல.  அதனால சொல்றேன்.  முதல்லையே நிறையா விசயங்களை மனசுல ஏத்தி குழப்பிக்க வேணாம்னு நினைக்கிறேன்.  இதுவரை நான் மேலே சொன்னதை கூட நீங்க மறந்து விடலாம்.  பாடம் 1 இனிமே தான் ஆரம்பிக்க போகுது.

 பிக் டூல்


கோரல்டிராவுல நுழைஞ்சதும் முதல்ல டூல்ஸ் பாக்சில் தெரியறது பிக் டூல்.  இந்த டூல்  ரொம்பவே பயன்படுகிறது.  இன்னும் சொல்லப்போனா இது இல்லேன்னா கோரல்டிராவே இல்லைன்னு சொல்லலாம்.  

இந்த டூலைத்தான் நாம அடிக்கடி பயன்படுத்த வேண்டிவரும். 
 இது ஒரு எழுத்தை படத்தை (ஆப்ஜெக்டை) பிக் செய்ய அதாவது செலக்ட் செய்ய பயன்படுகிறது. 

அதாவது ஒரு அரசியல்வாதிக்கு வலது கை மாதிரி அந்தாளுன்னு ஒருத்தரை குறிப்பிட்டு சொல்வது போல  கோரல்டிராவுக்கு வலது கை இந்த பிக் டூல்தான்.   காதலியை பிக் அப் பண்ணுகிற மாதிரின்னு கூட சொல்லலாம். அப்படி  இந்த டூல் வேலை செய்யும்.  

 இந்த டூல், ஆப்ஜெக்ட். டெக்ஸ்டு. லைன். பாக்ஸ். சர்க்கிள் எல்லாத்தையும்  இதுதான் பிக் அப் பண்ணும்.  அதுமட்டுமில்லாம  இந்த டூல் என்ன என்ன வேலையெல்லாம் செய்யுதுன்னு கீழே வரைபடமா என்னால முடிஞ்ச வரைக்கும் செஞ்சு காமிச்சுருக்கேன்.  பார்த்துக்கோங்க.  

கண்ட்ரோல் டூலையும் ஸ்பேஸ் பாரையும் அழுத்தினால் பிக் டூல் வரும். இன்னொரு தடவை அழுத்தினால் இதற்கு முன்னால் நாம் உபயோகப்படுத்திய டூல் வரும்.  நாம டூல் பாக்ஸ் போய் முதலில் காண்கிற பிக் டூலை (அம்புக்குறி  வடிவம்) எடுக்க வேண்டியதில்லை.  

எப்போது நமக்கு வேணுமோ அப்போது கண்ட்ரோல் கீ + ஸ்பேஸ் பாரை அழுத்தி வரவழைத்துக் கொள்ளலாம்.  நாம ஒருதடவை கூட மவுசைக் கொண்டு போய் பிக் டூலை கிளிக் செய்ய கூடாது.  அப்படி செய்தால் நாம இன்னும் சரியா கத்துக்கிடலைன்னு அர்த்தம்.  ஏனென்றால் விவரம் தெரிஞ்சவங்க அதாவது கோரல் டிரா நல்லா முழுசா பயன்படுத்துவோர் அடிக்கடி மௌஸையோ அல்லது டூல்ஸ் பாக்ஸையோ மெனுவையோ உபயோகப்படுத்த மாட்டார்கள்.  அதனால நீங்களும் அப்படியே பாலோ செய்யனும்னு கேட்டுக்கறேன்.  

சரி புதியதாக பழகுவோர் முதல்ல ஒவ்வொரு டூல்சா கிளிக் செய்து அது எப்படி வேலை செய்யுதுன்னு பார்க்கலாம்தானே என்று நீங்கள் நினைக்கலாம்.  அதுதான் கூடாது.  ஏனென்றால் நாம மவுசை டூல்ஸ் மெனுவுக்கு கொண்டு போய் கிளிக் செய்யப்போறதே இல்லை.  நான் முன்னேமே சொன்னது போல ஈசியா பழகனும்னா நான் சொல்றபடி கேளுங்க.  வரைபடம் கூட வேண்டாம்னு நினைத்தேன்.  ஆனாலும் உங்களுக்கு புரியனுமேன்னு....

படத்தை பெரியதாக்கி பார்க்க படத்தை ரைட் கிளிக் செய்து ஒப்பன் லிங்க் ன் நியூ டேப்பில் வைத்து படித்துக் கொள்க.




2 கருத்துகள்:

  1. இந்த வலைதளத்தில் கோரல்டிரா பாடம்
    ஆரம்பித்திருக்கிறார்கள். ஆசிரியரும்
    பிரிண்டிங் பிரஸ்ஸில் டிசைனராக வேலை
    பார்ப்பார் என தெரிகின்றது. வலைதள
    முகவரி : http://valikatie.blogspot.in

    பதிலளிநீக்கு
  2. பேஜ் மேக்கர் புதியதாக கற்பவர்களுக்கு ஒரு நல்ல துணை தங்களின் படைப்புக்கு நன்றி

    பதிலளிநீக்கு